நண்பர்களுடன் குளிக்க சென்ற கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விளாங்காடு பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சுரேஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து விலங்கடுபக்கம் பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்துக்கொண்டிருந்த சுரேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக செங்குன்றம் […]
