அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கோபமடைந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் […]
