மதுக்கடை பார் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுக்கடை பாரில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சாமிநாதனை அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சாமிநாதன் மீண்டும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
