பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு பழைய பேப்பர் ,துணி பை உள்ளிட்ட பொருள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இத்திட்டம் பலர் மத்தியில் வரவேற்பையும்,எதிர்ப்பையும் பெற்று வந்தது. மேலும் தமிழகத்தில் இத்திட்டத்தால் தொழில்கள் பாதிக்கப்படுகிறது என்றும்,தமிழக அரசு […]
