தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]
