திருச்சியில் மணமகனின் நண்பர்கள் நித்தியானந்தாவை வைத்து பேனர் அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணமகன் இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணமகள் விஜிக்கும் லால்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டின் சார்பாக, மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வரும் பொதுமக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை வரவேற்றும் பேனர்கள் வைத்திருந்தனர். […]
