கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வங்கி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் அஜய் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தார குப்பத்தில் இருக்கும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து அஜய் சக ஊழியரான ரகுவரன் மற்றும் ரகுவரனின் அண்ணன் […]
