குற்றாலத்தில் கனமழை பெய்துவருவதால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நான்குநேரி, களக்காடு, அம்பை போன்ற பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மேலும் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவிலிருந்து கனமழை பெய்து வருவதால் […]
