தத்துவவியல் விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய MIT, CEG, ACT, SAP ஆகிய 4 வளாகத்தில் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியலை உள்ளடக்கி பகவத்கீதையை படிக்க கட்டாயமாக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது. இதற்க்கு கல்வியாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தத்துவவியல் பாடத்தை கொண்டு வந்த சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார். […]
