சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக நிச்சயம் வழங்கும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து தெலங்கானாவில் உள்ள பாஜக பிரமுகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மன், ‘சாய்னா போன்ற பிரபலங்கள் பாஜகவில் இணைவது மோடி ஆட்சியின் செயல்திறனை குறிக்கிறது’ என்றார். மேலும், பாஜகவின் ஹைதராபாத் பிரிவு தலைவர் என்.ராமசந்தர், ‘சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக வழங்கும்’ […]
