சொந்தக் குழந்தைப் பிறந்த 2 நாட்களிலேயே தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பெற்றோரின் கவனக்குறைவால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியாகும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பாம்பன்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஜெனிஸ்.. இவருக்கும், லிபிஜோ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து சில ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை.. இதனால் ஆல்பிரின் […]
