குட்டி யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மான், காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் புல்லள்ளி வனப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 வயது ஆண் குட்டி யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு உள்ளது. இந்த குட்டி யானை மயங்கிக் கீழே விழுந்ததால் பிற யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. இதனை அடுத்து குட்டியானை விழுந்து கிடப்பதை பார்த்த […]
