மெக்கானிக்கல் துறையில் மாணவிகளுக்கு சிறப்பான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் மாணவிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 900 மாணவிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் பெண்களுக்கு […]
