உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள ஆயுஷ் அமைச்சகம் வெளியிடுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். பிரதமர் மோடி தனது உரையின் போது ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள் என கூறியிருந்தார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது அருந்துங்கள். தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். உணவில் சீரகம், தனியா, பூண்டு உள்ளிட்டவை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் […]
