வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாகனங்களில் சிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள், அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், போன்ற பொது மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி சார்பில் ஒரு […]
