முககவசம் அணிவதன் கட்டாயம் குறித்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டி.எஸ்.பி சிவா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.பி சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் ஆகியோர்களை அழைத்து முககவசம் அணிவதன் கட்டாயம் மற்றும் தடுப்பூசியின் பலன்கள், தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அப்போது டி.எஸ்.பி சிவா பொதுமக்களிடம் கூறியதாவது, தென்னாப்பிரிக்கா மற்றும் […]
