காவல்துறையினர் சார்பாக பள்ளியில் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. திருப்பத்தூரில் உள்ள பார்சம்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வைத்து காவல்துறையினர் சார்பில் மாணவர்களின் நலன் கருதி குற்றம், ஆன்லைன் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரேமா கலந்து கொண்டு இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலமாக ஏற்படும் உயிர் சேதம் குறித்தும், பின் பண இழப்பு ஆகியவற்றினை பற்றியும், தற்கொலை […]
