பொங்கல் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நெரிசல் இன்றி நிற்பதற்கு போதுமான ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் காளைகள் பங்கு பெறுவதற்கு ஏதுவாக தேவையான ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை செய்துள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காளைகள் நெரிசல் இன்றி செல்வதற்கும் காளைகள் கூடுவதற்கும் அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் […]
