Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்… நகைக்காக கொலை செய்த கும்பல்… தேடும் வேட்டையில் போலீஸ்!

ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத ஆசாமிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணம்பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா. கனவனை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மல்லிகாவைக் காண்பதற்காக அவரது உறவினரான மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்ற மீனாட்சி, சமையலறையில் மல்லிகா சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது […]

Categories
மாநில செய்திகள்

பத்தாம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் மாயம்.!

பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயமான சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளில் நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தனியாக வசித்து வந்த மூதாட்டி” வீட்டின் மேற்கூரை இடிந்து உயிரிழந்த சோகம்..!!

சென்னை ஆவடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை ஆவடி அடுத்துள்ள சேக்காடு அண்ணா நகரில் வசித்து வந்த  62 வயதான ராஜேஸ்வரி என்ற மூதாட்டி தனது கணவர் சுப்பிரமணி இறந்த பின்பு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் முருகன் என்பவர் அருகிலுள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்த மூதாட்டி மீது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து […]

Categories

Tech |