உரிய சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமலும், அனுமதி சான்று இல்லாமல் ஆட்டோக்கள் அதிக அளவில் ஓடிக் கொண்டிருப்பதாக துணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில் பேருந்து நிலையம் அருகாமையில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமலும், […]
