ஆட்டோ டிரைவரை நண்பர்களே இணைந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் நவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஆட்டோவில் மது போதையில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான கார்த்திக், பிரகாஷ், பழனி ஆகியோர் நவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை […]
