ஆட்டோ டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்காளிமேடு பகுதியில் ஆட்டோ டிரைவரான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த ஆட்டோ டிரைவரான அன்பழகனிடம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மணி என்பவர் திடீரென தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். மேலும் மணி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அன்பழகன் காவல் நிலையத்தில் […]
