கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பிலால் நகரில் மரியம் சுபாஷினி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உக்கடத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான முகமது என்பவருக்கும், சுபாஷினிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முகமது வீட்டிற்கு செல்லாததால் சந்தேகமடைந்த மரியம் சுபாஷினி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது முகமதுவுக்கு வேறொரு பெண்ணுடன் […]
