கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ டிரைவரான ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இவர்கள் சாத்தனக்கல் சிறிய பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஆனந்தன் பிரேக் பிடித்துள்ளார். […]
