2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களறங்கினர். இதில் ஆலன் முதல் ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார். […]
