இந்தியாவை கொரோனாவின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உதவிதொகை அளித்துள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. மேலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளால் இந்தியா மிகவும் திணறி வருகிறது. இதனை சமாளிப்பதற்காக உலகில் […]
