இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 28 கிரிகோரியன் ஆண்டு : 240_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 241_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 125 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். 632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. 1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். 1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: […]
Categories
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28…!!
