மாணவிகளின் வருகைப்பதிவேட்டில் சாதி பெயர் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 9-ஆம் வகுப்பில் இருக்கும் 6 பிரிவுகளில் 300 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கான வருகை பதிவேட்டில் அவர்களது சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியையான பொன்முடியிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து […]
