குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகாமையில் பெண் ஒருவர் 4 குழந்தைகளுடன் மண்எண்ணெய் கேனை கையில் எடுத்துள்ளார். அதை பார்த்த காவல்துறையினர் அச்சம்பவத்தை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் இடிதாங்கி கிராமத்தில் வசிக்கும் ராஜன் என்பவரின் மனைவி […]
