டாஸ்மார்க் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரும்பாடி பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள கேட்டின் பூட்டை மர்மநபர்கள் சிலர் உடைத்து கொண்டிருந்ததை கண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் […]
