தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பொதுமக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காட்டுமன்னார்கோவிலில் அண்ணாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டில் தனியாக சென்ற ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு […]
