முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்த காலத்தின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகள் 70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே […]
