வேறொரு நபரின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மக்புல் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம்- மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால் பாஷாவிற்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகி பார்த்துவிட்டு பணமில்லை என்று கூறி கார்டை பாஷாவிடம் […]
