ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை அதிகாரிகள் மீட்டு நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரமேல் ஊராட்சியில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்தி குளம் இருக்கிறது. இந்நிலையில் இக்குளத்தை காலப்போக்கில் சிலர் மண்ணை கொட்டி மூடி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாமல் அதை சுற்றிலும் வீட்டு மனை பிரிவுகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் குளத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் பள்ளம் […]
