மனைவிக்காக வாக்கு சேகரிக்க சென்ற அரசு ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கம்பட்டுநாடு ஊராட்சியில் இயக்குனராக பணியாற்றி வருகின்ற துக்கன் என்பவரின் மனைவி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக துக்கன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அதில் தன்னுடைய பெயரை நோட்டீஸில் அச்சிட்டு வாக்கு சேகரித்துள்ளார். இதனை உரிய ஆதாரங்களுடன் ஒன்றிய ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு ஆதரவாக […]
