பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். […]
