அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் […]
