ஜம்மு காஷ்மீரில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் […]
