கடந்த 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சரின் அனுமதிக்காக காத்திருந்ததால் தான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க உறுப்பினர் நந்தகுமார் முந்திய அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை உடனடியாக திறக்க தவறியதால் உடைப்பு ஏற்பட்டது சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் இடைப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கத்திருக்கு […]
