பாகிஸ்தானில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்கப்பட்டதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள நங்கனா சாகிப் பகுதியை சேர்ந்த சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட அப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி வற்புறுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், பின்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு […]
