தனக்கு நடைபெறவுள்ள குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றக்கோரி, 15 வயது சிறுமி ஒருவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். குழந்தைத் திருமணத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் அவை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அவர்களது கனவை பல பெற்றோர்கள் அழித்து வருகின்றனர். அதற்கு மீண்டும் உதாரணமாகியுள்ளது, ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஓர் சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டோங் மாவட்டத்தில் […]
