மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை […]
