மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை அடித்து உதைத்து அப்பெண்ணின் கணவர் அவனை போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூர்த்தி என்பவன் தங்கி வேலை பார்த்துவருகிறான்.. இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கட்டட வேலை எதுவும் இல்லாததால் அந்த இடத்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு வீட்டில் தண்ணீர் […]
