லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பதலபள்ளி பகுதியில் ஹரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்யுமாறு அப்பகுதி சர்வேயர் வடிவேல் என்பவரை அணுகியுள்ளார். அப்போது புரோக்கரான தமீஸ் என்பவர் மூலம் வடிவேல் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சிறிது நாள் கழித்து ஹரிநாத் 30 ஆயிரம் ரூபாயை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]
