மினிவேன் கண்ணாடியை உடைத்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம் கலத்திபுரா பகுதியில் வியாபாரியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிவேன் ஒன்று உள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்து வேனில் கர்நாடக மாநிலத்தில் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிந்தராஜ் காய்கறி வாங்குவதற்காக பூண்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது […]
