Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் காவலரிடம் அடிதடி…… அத்துமீறல் வழக்கு…… முன்னாள் காவல் ஆய்வாளர் கைது….!!

சென்னை ஆலந்தூரில் பெண் காவலரை அடித்து துன்புறுத்திய புகாரின் பேரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  சென்னை ஆலந்தூர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் உமா மகேஸ்வரி என்பவருக்கும், டில்லிபாபு என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டில்லி பாபு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சமயத்தில்  சரிவர பணிக்கு வராததால் காவல்துறை சார்பில் அவருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து பணியில் இருந்து நீக்கி விட்டனர். இந்நிலையில் டில்லி பாபு காவலராக பணிபுரிந்து வரும்  உமா மகேஸ்வரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் போலீஸ் மீது கல்லெறிந்த இளைஞர் கைது….!!

காவல்துறை உதவி ஆய்வாளரை மதுபோதையில் கல்லால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளர். சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37). இவர் பணியில் இருக்கும் போது, அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது, போதை ஆசாமி ஒருவர் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கியதில் […]

Categories
திருப்பூர் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” சிறப்பு சலுகையுடன் போதை பொருள் விற்பனை……. 10கிலோ பறிமுதல்…. 2 பேர் கைது…!!

திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

“எல்லை பிரச்சனை” 14 மாத சிறை தண்டனை……. விமானத்தில் சொந்த நாடு திரும்பும் மீனவர்கள்…..!!

14 மாத சிறை தண்டனைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் இல்லாமல் நாடு செல்ல முடியாமல் தனித்து வந்த நிலையில் இன்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தண்டனை காலம் முடிந்த பிறகும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியவில்லை. பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கிக்கோங்க …”கையும் , களவுமாக சிக்கிய ஆய்வாளர்” லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி …!!

வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகையின் நெருங்குவதையொட்டி அரசு அலுவலர்கள் நன்கொடை பெறுவது , லஞ்சம் பெறுவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கக்கூடிய தமிழழகன் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் காவல்நிலையம் வந்தனர். பின்னர் […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வரி செலுத்தமாட்டேன்” நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்…!!

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது  மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். […]

Categories
சினிமா சென்னை மாவட்ட செய்திகள்

“சினிமா ஆசை” கல்லூரி கட்டணம் ரூ1,20,000 மோசடி….. படிப்பை பாதியில் நிறுத்தி பரிதவிக்கும் மாணவன்….!!

கல்லூரி மாணவனுக்கு சினிமா ஆசை காட்டி ரூ1,20,000 பணத்தை தந்தை , மகன்  இருவரும் சேர்ந்து சுவாகா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ் எஸ் கண்ணன். இவர் சென்ற வருடம் நம்ம கதை என்ற தலைப்பில் தனது மகன் கவித்திறன், நிகாவித்திறன் ஆகியோரை வைத்து படம் ஒன்றை தயாரித்தார். அந்தப்படம் திரையரங்கில் ஓரிரு நாட்களே  ஓடிய நிலையில் ரூட் பொருள் போன்ற அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாகவும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான ATM கார்டு மூலம் பண மோசடி……. உஷாரான கூலி தொழிலாளி……. 3 பேர் கைது…!!

சேலத்தில்   கூலி தொழிலாளி ஒருவரிடம் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர். சேலம்  மாவட்டம் தட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க அவரது ஏடிஎம் கார்டு பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு  பணம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொலை….. கில்லி விஜய் பாணியில் மிளகாய் பொடி தூவி தப்பிக்க முயற்சி….. 2 பேர் கைது…!!

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தரேன்…. பல கோடி மோசடி ….. பெண்களுடன் உல்லாசம் ….. தம்பதிகள் கைது …!!

வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏஜென்சி உரிமம் பெற்றுத் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாகி தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்எம்வி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும், ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கஞ்சா கடத்தல் – இருவர் கைது ……!!

அண்ணா நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து சென்னை அடுத்துள்ள அண்ணா நகரில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர்களை திருமங்கலம் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பீர் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து முகமது ரியாஸிடம் கொடுப்பது தெரியவந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றேன்…. நம்பி வந்தேன்…. கருவை கலைத்து , மீண்டும் கற்பமாக்கினான் ….!!

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]

Categories
மாநில செய்திகள்

செல்லாத 500,1000 நோட்டுகளை வைத்து வியாபாரம்….. ரூ1.75 கோடி பறிமுதல்….. 6 பேர் கைது…. கேரளாவில் பரபரப்பு..!!

கேரளாவின் பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை சேகரித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அவர்களிடமிருந்த 1.75 கோடி ரூபாய் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளையும் சொகுசு காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை கோழிக்கோடு, மலப்புரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1கோடி கொடு 2 ஆக மாத்தி தாரேன்…”கமிஷனுக்கு ஆசை” ரூ80,00,000 மோசடி….. பணத்தை இழந்து தவிக்கும் பேன்ஸி ஸ்டார் ஓனர்…!!

சென்னை வேப்பேரியை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியில்  ஒப்பனை மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.  அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகமது என்பவர் நேரில் சந்தித்து  தமக்கு தெரிந்தவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 100 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை 500 மட்டும் 2,000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும்  ஆசை வார்த்தை கூறியுள்ளார். கூடுதல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தினேஷும் 80 லட்சம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியிடம் பலாத்கார முயற்சி….. திருமணமான இளைஞர் கைது….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் 16 வயது சிறுமியை பலாத்காரம்  செய்ய முயன்ற வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்றைய தினம் தனது சொந்த தம்பியுடன் தேவாலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள புதரில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவர்களை வழிமறித்து அவரது தம்பியை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் பதற்றம் அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” 1 வாரம்…… 100 பேர்….. ரூ25,00,000 மோசடி….. 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது…!!

சென்னையில் மோசடி  கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள்  ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு  கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரபல வங்கியில் முறைகேடு” 21,000 போலி கணக்குகள்…… ரூ4,350 கோடி பணம் மோசடி….!!

பிஎம்சி வங்கி முறைகேட்டில் கைதான வங்கியின் முன்னாள் தலைவர் வரியம் சிங்கிடம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21,000 போலி கணக்குகள் மூலம் ரூபாய் 4350 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில்  பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் அமிர்தசரசில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்…… நெல்லையில் பரபரப்பு…..!!

நெல்லை  மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கைவரிசை காட்டிய வழிப்பறி கும்பல்…… குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” சொந்த மகளை கொல்ல முயன்ற பெற்றோர்கள் கைது….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

அவுரா TO மும்பை எக்ஸ்பிரஸ்…. “ரூ5 கோடி”… 13 கிலோ தங்கம்….. கடத்தல் வேலையில் ஈடுபட்ட பலே திருடர்கள்….!!

ஒடிசாவில் விரைவு ரயில்லில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5 கோடி மதிப்பிலான சுமார் 13 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.  அவுராவிலிருந்து மும்பைக்கு செல்லும் ஞானேஸ்வரி விரைவு இரயிலில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரூர்கேலா என்ற பகுதியை வந்தடைந்த ஞானேஸ்வரி விரைவு ரயிலில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 110 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆவி சொன்னதால் செய்தேன்” 1 1/2 வயது குழந்தை கழுத்தை அறுத்த போதை இளைஞன்….!!

சென்னை புழல் பகுதி அருகே ஆவி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை புழல் பகுதியை அடுத்த ஜஸ்டின் புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ். இவர் நேற்றைய தினம் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளான்.  இதையடுத்து தப்பி ஓடிய அவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புழல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது மனைவி ….!!

கருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர்  பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. 10 ஆண்டு சிறை தண்டனை….. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கௌகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாச்சலப் பிரதேசம் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

20 வழக்குகள்… தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த ரவுடி…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் மாவட்டம் கிச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகே வந்த சிலம்பரசன் தனது காலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

60 வயது திமுக நிர்வாகி….”சிறுமியிடம் அத்துமீறல்”… வெளுத்து வாங்கிய பொதுமக்கள் ….!!

வியாசர்பாடியில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னையில் உள்ள வியாசர்பாடியின் அன்னை சத்தியா நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன். 60 வயதான இவர் அந்த பகுதியில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரிம் கடை நடத்தி தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார். மேலும் அந்தப்பகுதி திமுகவில் முக்கிய நிர்வாகியாகவும்  இருந்து வருகிறார்.இவரது கடைக்கு அந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்க வந்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது கடையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரையில் கஞ்சா விற்பனை” 2 பேர் கைது ….!!

மதுரை அவனியாபுரத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கினர்.  அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல்  மதுரையின் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் போலீசார் சோதனை தீவிரப்படுத்தியுள்ளனர்

Categories
சேலம் மாநில செய்திகள்

6 பெண்கள்…. 1 கல்லூரி மாணவி….. ஏராளமான ஆபாச வீடியோ….. சிக்கிய வி.சி.க நிர்வாகி…!!

பொள்ளாச்சியை போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் மோகன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மீண்டும் தொந்தரவு செய்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் அளித்தார்.  இதையடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையத்தில்  விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தெளிவான ஸ்கெட்ச்….. முதலாளிக்கு துரோகம்… ரூ1,50,000 வழிப்பறி…. உல்லாசத்திற்கு பிறகு சிறைவாசம்…!!

வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாட்டு வெடிக்குண்டுடன் காட்டுக்குள் சுற்றிய வேட்டையர்கள்…. அதிரடியாக கைது செய்த வனத்துறை…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின்  நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 பேர்…. 1 பெண்… கள்ள காதலனை துரத்தி…. கட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம்…!!

சேலத்தில் கள்ள  காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று  வன்புணர்வு செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்  மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

1 வருஷமா பாலியல் டார்ச்சர்… சுவாமிய கைது பண்ணுங்க… நீதிபதியிடம் கதறிய மாணவி..!!

பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை  கைது செய்ய வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி வலியுறுத்தியுள்ளார்.  உத்தரபிரதேசத்தில் தம்மை மிரட்டி ஓராண்டுக்கும் மேல் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சுவாமி சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி தனது புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்னும் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு கூட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

30 பெண்கள்…. 150சவரன்…. அசால்ட்டாக ஏமாற்றிய 24 வயது போலி சாமியார்…!!

சென்னையில் 24 வயதான போலி சாமியார் 30 பெண்களிடம் 150 சவரன் நகையை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 400 குடும்பங்களுக்கு மேல் உள்ள ஒரு பகுதியில் 30 க்கும் மேற்பட்ட பெண்களை நூதனமாக ஏமாற்றி 150 சவரன் நகைகளை கொள்ளையடித்த 24 வயதான போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். சென்னை பொண்ணு வேலுப்பிள்ளை தோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி ஆனந்த். இந்த கோவிலுக்கு அருகே தாய் , தந்தையுடன் வசித்து வரும் 24 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”ரூ 10,00,000” வேணும்…. என்ன கடத்திட்டாங்க… காதலனுடன் நாடகமாடிய மகள்…!!

தந்தையிடம் தாம் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடி 10 லட்சம் ரூபாய் கேட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகனும் 22 வயதில் வித்யா என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகவும் ,  வித்தியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்கள். அண்ணனும், தங்கையும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

ரூ 2,00,00,000 …”லஞ்சம் வாங்கிக்கோங்க”… ஸ்கெட்ச் போட்டு புடிச்ச CBI….!!

லட்சம் கொடுக்க வர செய்து CBI அதிகாரிகள் கையும் , களவுமாக சோமா எண்டர்பிரைசஸ் நிறுவன துணை தலைவர் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர். சென்னையின் வானகரத்தில் இயங்கி செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனமான சோமா எண்டர்பிரைசஸ்_க்கு எதிராக CBI வசம் இருக்கும் நிலுவை வழக்குகளை நிறுவனத்துக்கு சாதகமாக்கி அதிலிருந்து மிளவைப்பதற்கு அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் , புரோக்கர்கள் என சந்தித்துள்ளதாக தெரிகின்றது. மேலும் உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் பிரிவு 1-ல் நியமிக்கப்பட்டுள்ள தீராஜ் சிங் […]

Categories
உலக செய்திகள்

ரூ85,00,000…. அதிஷ்டமாக வந்த CASH…. செலவுக்கு பின் திருட்டு CASE..!!

அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது  வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ4,00,000க்கு ஆசைபட்டு டபுள் கேம் ஆடிய கடத்தல்காரர்கள்…. போலீசில் சிக்கி பரிதாபம்..!!

கன்னியாகுமரியில் கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தகுமாரின் மாமன் மகளான ஜெர்சியை வெட்டிக்கொன்ற சாஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமார் என்பவரை கொல்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி விட்டுள்ளார். ஆனால் சாந்தகுமாரை கொலை செய்யாமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு” 4 துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்… விமானப்படை அதிகாரி கைது..!!

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

“பாலின குற்றம்”10 ஆண்டுக்கு பின்… 3 மருத்துவர்களுக்கு 3 ஆண்டு சிறை…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு பெண் குழந்தைகளாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் வழக்கம் சில இடங்களில் இருந்து நிலையில், கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை அறிவிப்பதை குற்றமாக அறிவித்து சட்டம் 1994 இல் இயற்றப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குவாலியர் குழந்தை பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லைக்குள் ஊடுருவல்” 26 பேர் அதிரடியாக கைது… மேற்குவங்கத்தில் பரபரப்பு..!!

வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததன் காரணமாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்கிலும் கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ந்து இந்திய உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச எல்லையில் இருந்து 26 பேர் மேற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வைக்கக்கூடாத இடத்தில் தங்கம்… ஆடைகலைந்து சோதனை… ரூ37,00,000 பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் ரூ37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில்  நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திட்ட குடியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்டோர் சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்களை  தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ44,00,000 தங்கம்” மலக்குடலுக்குள் வைத்து கடத்தல்… சோதனையில் முகம் சுழித்த காவலர்கள்..!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்கிய பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அப்துல் ரகுமான் மற்றும் இப்ராகிம் இஷா ஆகிய இரு பயணிகள் நடுக்கத்துடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை  அழைத்துச் சென்று உடமைகளை சோதனையிட்டனர். அதில், அவர்கள் இருவரும் மலக்குடலில் தங்கத்தை மறைத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உயர்மின் கோபுரம்” விவசாய நிலங்களுக்குள் அத்துமீறல்… பெண்களிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட போலீசார்..!!

பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களை சிறைபிடித்த விவசாயிகள் விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ38,00,000 மோசடி வழக்கில் மதுரை தொழிலதிபர் கைது..!!

மதுரையில் பார் நடத்த அனுமதி வழங்கியதில் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வணிக வளாக உரிமை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் என்ற வணிக வளாகத்தில் பார் நடத்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகரன் முன்பணமாக 68 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வணிக வளாகத்தில் பார் நடத்தி வந்த சந்திரசேகருக்கு நஷ்டம் […]

Categories
உலக செய்திகள்

நினைவாக பாட்டிலில் மணல் எடுத்த இளைஞர்கள்…. திருட்டு வழக்கில் 1 ஆண்டு சிறை..!!

இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்ற இரண்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  இத்தாலி சர்த்தீனிய கடற்கரையிலிருந்து மணல், கூழாங் கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியான கடற்கரையில் 40 கிலோ மணலை திருடியதாக கூறி இரண்டு french சுற்றுலா பயணிகள் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருவரும் 14 பாட்டில்களில் நிரப்பப்பட்டு இருந்த மணலுடன் […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டியதாக புகார்… தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை காவற்படை…!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம்  மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 132 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில் ஒரு விசைப்படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கோட்டை பட்டினத்தில் இருந்து சுமார் 35 மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இரவு 11.31  மணி அளவில் அங்கே  வந்த இலங்கை கடற்படையினர் எந்த எச்சரிக்கையும் அளிக்காமல்  விசைப்படகையும், 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“5 வயது குழந்தை” பாலியல் பலாத்காரம்…. சிசிடிவியில் சிக்கிய துப்புரவு தொழிலாளி..!!

தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி துப்புரவு தொழிலாளி  ஒருவர் அதே  பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெற்கு டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த துப்புரவு தொழிலாளி அங்கு படித்து வரும் சில குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முதியவரை குறி வைத்து” ஏமாற்றும் போலீஸ் கைது..!!

சென்னையில் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 67 வயதான மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் கடந்த 1-ம் தேதி கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் ஒரு போலீஸ் என குப்பானந்தனிடம் கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”சாராயக் கடத்தல்” பெண் கைது – இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்..!!!

கடலூர் அருகே நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உண்ணாமைலை செட்டி சாவடியில் மது விலக்கு அமல் பிரிவு  சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார்  திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர்  இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த  போலீசார் அந்த காரினை சோதனை செய்ததில்  148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் […]

Categories

Tech |