Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேத்தி என்றும் பாராமல்….. பாலியல் தொல்லை…… தாத்தா கைது….. கோவை மகளிர் போலீஸ் அதிரடி….!!

கோவையில் 10 வயது சிறுமிக்கு  அவரது தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் பொன்னுச்சாமி என்ற 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சிறுமிக்கு தாத்தா முறை ஆவார்.  இந்நிலையில் அடிக்கடி சிறுமி வீட்டிற்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காரில் கஞ்சா” டீச்சர் பண்ணுற வேலையா இது….. சென்னை மக்கள் அதிருப்தி…!!

சென்னையில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி  பேராசிரியர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை திருவிக நகரை அடுத்த கொரட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியே கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி  சோதனையிட்டபோது அதில் 1500 கிராம் கஞ்சாவும் ரூ 11,000 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொகுசு வாழ்க்கை வாழ நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது

பிரபல தனியார் நகைக்கடையில் நகையைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நகைக்கடை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், முதுநகர் சான்றோர் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (29). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கலைச்செல்வம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விடுமுறை எடுத்து இருந்ததால் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘ துரோகம் செய்ததால் கத்தியால் குத்தினேன் ‘ – கோவையை அதிரவைத்த நபர்

 துடியலூர் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய, அவரது உறவினரைப் பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ், தன் மனைவியின் அக்காள் மகளான மாதுவையும் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த ஐந்து சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து காவல் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் சர்வதேச சூதாட்ட தரகர் கைது!

கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் பந்தய மோசடி மற்றும் ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக சர்வதேச சூதாட்ட தரகர் ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். கே.பி.எல் சூதாட்ட மோசடி செய்த ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் இதை பற்றி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் விமான நிலையாளங்களில் ஜிதின் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் சர்குலர் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை அவர் நெதர்லாந்தில் இருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“NLCயில் திருட்டு” கத்திக்குத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரர்….. 2 பேர் கைது…!!

நெய்வேலி என்எல்சியில் திருட்டு கும்பலிடம் கத்திகுத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலுள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மணி, சபரிவாசன், சுதாகர், சண்முகம் ஆகியோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குத்து சண்டை சொல்லி தாரேன்” 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. கல்லூரி மாணவன் கைது…!!

குத்துசண்டை பயிற்சி அளிப்பதாக கூறி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிபி. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே சமயத்தில் கோவைபுதூர் ராமநாதபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உதவி பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 16 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம்” ஒரே நாள்… ஒரே மாவட்டம்…. 2 பேர் கைது…. தொடரும் போலீஸ் வேட்டை…!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம்  செய்த குற்றத்திற்க்காக தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர், அதை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வோர், சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் வரல…. காலால் எட்டி மிதித்து…. கல் எரிந்ததால்…. ATM மிஷன் சேதம்…. மர்ம நபர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்த பொழுது இயந்திர கோளாறு காரணமாக பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்  இயந்திரத்தை பலமுறை காலால் உதைப்பது, கல்லை கொண்டு தாக்குவது உள்ளிட்ட  காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய 1000 பேர் கைது…. சர்வதேச எல்லை பாதுகாப்பு படை தகவல்….!!

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தமது குடிமக்கள் ஆயிரம் பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்கதேச அரசு  தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேசத்தின் சர்வதேச எல்லை பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக வசித்தவர்கள் குறித்து கடந்த மாதம் டெல்லியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விவாதித்தனர். அதனடிப்படையில் முதன்முறையாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்திய எல்லையை கடந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“TWO-WHEELER திருட்டு” CCTVயில் சிக்கிய கள்ளச்சாவி….. 19 வயது இளம்பெண் கைது….!!

சென்னை  திருவல்லிக்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 19 வயது இளம்பெண் கைது  செய்யப்பட்டுள்ளார்.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியை அடுத்த  தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் யாசர். 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றுள்ளார்.  மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து யாசர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பைக் திருடியதால் சிறுவர் உட்பட மூவர் கைது …!!!கும்பகோணம் அருகே பரபரப்பு …!!!

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  . தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்த்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார் .அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை . 1,00,000ரூபாய் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனம் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி கோவில் உண்டியல் பணம் திருட்டு….. மூதாட்டி உட்பட 3 பேர் கைது…..!!

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ25,00,000….. போலி மதுபாட்டில்களுக்கு வீட்டோடு சீல்….. 2 பேர் கைது….. புதுச்சேரி போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன்  காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச படம் பகிர்ந்தவர்கள் லிஸ்ட் தயார்… மாவட்டங்களுக்கு அனுப்பியாச்சு.. ஏடிஜிபி ரவி பேட்டி…!!

தமிழகத்தில் சிறுவர்கள் ஆபாச படங்களைப் பகிர்பவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி சென்னையில் சிறார்களின் ஆபாசபடங்களை பகிர்ந்த 30 பேர் கொண்ட பட்டியல் காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தற்காத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பரின் மனைவி பலாத்காரம்….. சைக்கோ கில்லர் கைது ….!!

தெலங்கானாவில் நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமையம்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரே அந்த சைக்கோ கொலையாளி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராமையம்பேட்டையில் கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில்,அருண் என்னும் சைக்கோ கில்லரை கைது செய்தனர். அருண் சிறையில் அறிமுகமான […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மதுரை

“மாணவர்கள் போராட்டம்” மதுரை கோவையில் மறியல்…… 50க்கும் மேற்பட்டோர் கைது….!!

டெல்லியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை கண்டித்து  மதுரை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராகவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் தற்பொழுது வலுபெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்……. சென்னையில் பரபரப்பு….!!

இந்திய குடியுரிமை  சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை   எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பாக  மாவட்டம் தோறும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இளைஞரணி சார்பாக சென்னை மாவட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  இந்திய குடியுரிமை […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊராட்சித் தலைவர் பதவிப் போட்டியில் இளைஞர் கொலை…!!

சாத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கிராம கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமாசுப்பு மனுதாக்கல் செய்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான இவர் தன்னை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ததற்காக  ஊர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். கிராம மக்களின் ஒப்புதலைப் பெறாமல் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ராமசுப்பு மனு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாப்பிளை ஆக ஆசைபட்ட இளைஞர்…. கம்பி என்ன வைத்த காவல்துறை ….!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கொடூர கொலை” உயிரை பறித்த வாட்சப் வதந்தி……… கோவையில் பரபரப்பு…..!!

கோவையில் வெறும் வாட்டசாப் வதத்ந்தி ஒருவரின் உயிரையே எடுத்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே கடந்த மூன்றாம் தேதி காயங்களுடன் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. வாட்ஸாப்ப் வதந்தி : சண்முகத்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மொக்க காரணம்” மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்……. சென்னையில் பரபரப்பு….!!

மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“CCTVக்கு கலர் பெயிண்ட்” ATMஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது….!!

சென்னை ஆவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை  ஆவடி பகுதியை  அடுத்த முத்தா புதுபேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில்புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கலர் பெயிண்ட் அடித்து திருட முயன்றுள்ளார். இதனை வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்த அதிகாரி ஒருவர் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உல்லாசமாக வாழ….. திருடர்களாக மாறிய காதலர்கள் …!!

சொகுசு வாழ்க்கை வாழ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவலர்கள் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் கடந்த 21ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்த 4 சவரன் நகை திருடு போனதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குழந்தை தொடர் அழுகை” மூச்சு திணற திணற கொடூரமாக கொன்ற தாய்…… வேலூரில் பரபரப்பு…!!

வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணி கொடு….. இல்லைனா போட்டோவை பரப்பிடுவேன்…… மிரட்டல் விடுத்த வனக்காவலர் அதிரடி கைது….!!

காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வனத்துறை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள வனப்பகுதியில் வன உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ராஜா அந்த பெண்ணிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், தன்னை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை கொல்ல ரூ50,00,000……. பெட்ரோல் குண்டு வீசிய கூலிப்படை…… தொழிலதிபர் மனைவி மரணம்….!!

பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிவேகம்” தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் பலி……. ஓட்டுநர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசை கொடூரமாக கழுத்தில் தாக்கிய பிரபல ரவுடி கைது……. சென்னையில் பரபரப்பு….!!

சென்னையில் பிரபல ரவுடி கூறிய தகடு போன்ற பொருளால் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதில் அவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பல்சர் பாபு. இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி புத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக பல்சர் பாபு கைது செய்யப்பட்டு புத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் மாவோயிஸ்ட் தீபக் கைது….!!

மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான தீபக்கை காயமடைந்த நிலையில், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். தமிழ்நாடு – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்து, தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினரும்; கேரள சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரும் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அட்டப்பாடி வனப்பகுதியில் கேரள மாநில சிறப்பு அதிரடிப் படையினர், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மணிவாசகம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கச்சியை ஏன் டா ஏமாத்துனா..!.. கத்தியுடன் மிரட்ட வந்த இளைஞர்கள் கைது….!!

 புழல் அருகே தங்கையை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கத்திமுனையில் மிரட்ட முயற்சித்த இரண்டு இளைஞர்களை புழல் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை செம்பியம் நெடுஞ்சாலையும் சூரப்பட்டு சாலையும் சந்திக்கும் அரசு மதுபானக் கடை அருகே புழல் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பெரம்பூரிலிருந்து செங்குன்றம் நோக்கி வந்த ஆட்டோவை மடக்கியபோது, அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனையடுத்து காவல் துறையினர் ஆட்டோவை துரத்தி சென்று பிடித்தனர். அப்போது காவல் துறையினரைக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சம்சாரத்தை மின்சாரம் வைத்து கொல்ல முயன்ற கணவர்…….. மத்திய சிறையில் அடைப்பு….!!

நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் வைத்து கொலை செய்ய முயன்ற கணவன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் பெங்களூருவில் உடன் பணிபுரிந்த நாமக்கல் ராமா புரத்தைச் சேர்ந்த ரூபிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது ரூபிக்கா தந்தைக்கு திருமண செலவுகளுக்காக சிவப்பிரகாசம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை சிவப்பிரகாசம் திருப்பி கேட்ட பொழுது மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொன்ன இடத்துக்கு ரூ50,00,000 வரணும்…… மாறுவேடத்தில் ஸ்கெட்ச்…… 4 பேரை தூக்கிய தமிழக போலீஸ்….!!

வேலூரில் பிரபலதொழிலதிபரை கடத்திய மர்மக்கும்பல் ரூ 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள்  அதிரடியாக கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை  சேர்ந்தவர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வழக்கம் போல எட்டு மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் பிரபாகரன்க்கு  செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அருள் தன்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீதிமன்ற வளாகத்திற்குள் செல்போன் திருடிய இளைஞர்கள்…….. புழல் சிறையில் அடைப்பு….!!

நீதிமன்ற வளாகத்திலேயே செல்போன் திருடிய அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் ஆஜராக சுந்தரவடிவேல் என்பவர் நேற்று வந்திருந்தார். அதேபோல் வேறொரு வழக்கில் ஆஜராவதற்காக ஆதம்பாக்கத்தை சேர்ந்த  அரவிந்த் ரமேஷ் ஆகிய இருவரும் வந்து இருந்தனர். அப்போது அரவிந்த் குமாரபுரம் சேர்ந்த சுந்தரவடிவேலு என்பவரது செல்போனை அவரது பாக்கெட்டில் இருந்து லாபகமாக திருடி உள்ளார். இதை அறிந்த சுந்தரவடிவேல் அரவிந்தை கையும் களவுமாக பிடித்துள்ளார். பின் அவருடன் வந்த மற்றொரு நபரான ரமேஷ் […]

Categories
மாநில செய்திகள்

“இரட்டிப்பாக்கி தருகிறேன்” ரூ59,00,000 மோசடி……. ஏமாந்த வியாபாரிகள் போலீசில் புகார்….!!

ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எஸ்பி இவ்வாறு தெரிவித்தார், பணத்தை இரட்டிப்பாக்கி தரும் ரேடியோ ஆக்டிவ் […]

Categories
மாநில செய்திகள்

“சயனைடு கலந்த பிரசாதம்” 10 பேரை கொன்ற சீரியல் கில்லர்…….. ஆந்திராவில் கைது….!!

ஆந்திராவில் பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து 10 பேரை கொலை செய்த சீரியல் கொலைகாரனை மேற்கு கோதாவரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 16ஆம் தேதி வேலூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜ் சாலையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மற்றும் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாகராஜை என்டிஆர் காலனியைச் சேர்ந்த சிம்மாதிரி என்கின்ற சிவா சயனைடு கலந்த பிரசாதம் கொடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போகமாட்டோம்…. ”அரை நிர்வாணமாக இருக்காரு” குமுறும் மாணவிகள் ….!!

ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

செல்போனில் படமெடுத்து தொடர் பாலியல் சீண்டல்……. போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது….!!

புதுச்சேரியின் முதலியார்பேட்டை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவருக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த அலெக்சாண்டர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதை செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்த விவரத்தை அறிந்த சிறுமியின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ25,000 லஞ்சம்……. பேரூராட்சி அலுவலர் கைது…… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

கடலூரில் வீடு மனை அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அதிகாரியாக சக்கரவர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வடலூர் மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை யும் சேர்த்து பொறுப்பேற்று பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குறிஞ்சிபாடி தானுர் கிராமத்தில் வசித்து வரும் மோகன் தாஸ் என்பவர் 25 […]

Categories
மாநில செய்திகள்

வள்ளுவர் சிலைக்கு காவி துண்டு……. அனுமதி மீறல்…… அர்ஜுன் சம்பத் கைது…!!

வள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவிதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் […]

Categories
மாநில செய்திகள்

கோவிலுக்குள் பாலியல் சீண்டல்…… ஐயரை அடித்து… உதைத்து…. நிர்வாணமாக்கிய பெண்கள்…… ஆந்திராவில் பரபரப்பு…!!

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐயரை கோவிலுக்குள்ளையே பெண்கள் ஒன்று கூடி அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண் பக்தர்களுக்கு சாமிக்கு தீபாராதனை காட்டும் ஐயர் ஒருவர் பாலியல் சீண்டல் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அந்த ஐயர் கோவிலுக்குள் வந்த ஒரு சில பெண்களிடம் கோவிலுக்குள்ளேயே தவறாக நடக்கவும் முயற்சி செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அவரை சரமாரியாக தாக்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“துப்பாக்கி சூடு வழக்கு” குற்றவாளி விஜய் நீதிமன்றத்தில் சரண்….!!

சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளியான விஜய் என்பர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் விஜய். இன்று வீட்டிற்கு  பாலிடெக்னிக் மாணவர் முகேஷ்  சென்றுள்ளார். இருவரும் நண்பர்கள்  என்பதால் வீட்டில் இருந்து இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது திடீரென்று வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டு உடனடியாக  அங்கிருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று  பார்த்த போது முகேஷ் தலையில் குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். இதையடுத்து குரோம்பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிறந்து 15 நாளே ஆன பெண் குழந்தை……. ஆற்றில் புதைப்பு……. வெறுப்பால் தந்தை கொடூர செயல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை தந்தையே தென்பெண்ணையாறு ஆற்றில் புதைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை அடுத்த சுந்தரேசபுரம் ஏரியாவை சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கும் சௌந்தர்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து 15 மாதங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்த வரதராஜன் குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாயை காப்பாற்ற எண்ணி…… பெண்ணை கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது…….. சென்னையில் பரபரப்பு….!!;

சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. திருட்டு செல்போனில் பேசிய இளைஞர் கைது….!!

ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு தூத்துக்குடி சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து அந்த ரயில் நிலைய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவீர சோதனைக்கு பின்பு அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே செல்போனில் மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கஞ்சா விற்பனை” தப்புடா தம்பி…… தட்டி கேட்ட ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….!!

சென்னை அருகே கஞ்சா பயன்படுத்தியது குறித்து தட்டிக் கேட்டவர் வீட்டிற்குள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் அதே பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் முருகன். இவர் வீட்டின் மாடியில் இருந்த குடிசை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் குடிசை வீடு மற்றும் அதிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

+2 மாணவி பாலியல் பலாத்காரம்……. இளைஞன் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…….. சென்னையில் பரபரப்பு…..!!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை  திருமுல்லைவாயில் பகுதியை அடுத்த அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவன் பிளஸ்டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் வீட்டை விட்டு வருமாறு அழைத்த பொழுது மாணவி வர  மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த மாணவியை கடந்த மாதம் முப்பதாம் தேதி குருபிரசாத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலி…. 2 பேரை கைது செய்தது போலீஸ் …!!

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். நேற்று மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது . இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மாஞ்சா நூல் காமராஜர் பகுதியில் இருந்து பறந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜ் என்பவரையும் ,  15 வயது சிறுவன் ஒருவனையும்  காவல்துறையினர் கைது செய்கிறார்கள். 2 பேரிடமும் காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட விடல…… பெட்ரோல் குண்டு வீசினோம்….. கைதான 3 பேர் பகீர் வாக்குமூலம்….!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை கோவில் தெரு மேற்கு மாட வீதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட பொழுது பொதுமக்கள் பார்த்து கூச்சலிட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து  பெட்ரோலை திருடவிடாத ஆத்திரத்தில் அவர்கள் கடந்த 28ம் தேதி நள்ளிரவு அப்பகுதிக்கு சென்று தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் இருசக்கர […]

Categories

Tech |