ரூ 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதோடு, பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேடபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திக்கொண்டு விசைத்தறி களுக்கு பாவு நூல் வழங்கி வருகிறார். இவரிடம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தனபால் என்ற இருவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு பாவு நூலை வாங்கி சென்று உள்ளனர். இவர்கள் […]
