உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, ஏழு தமிழர் விடுதலை குறித்து என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்பார் என அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடலூரை அடுத்த ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியில் திராவிடர் கழக மூத்த உறுப்பினர் கோதண்டபாணி கமலா அம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களை சந்தித்த அளித்த அவர், ’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிரபராதிகளான என் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட […]
