ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் அமைக்கப்படாததால் மத்திய அரசை கண்டித்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகாமையிலிருக்கும் பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க நகர செயலாளர் இளங்கோவன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் கே.சி.இ. சிற்றரசு, […]
